ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: உக்ரைன் சதியா என விசாரணை

ரஷ்யாவில் மேற்கு பகுதியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ரயில் ஒன்று சிக்கி, அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

Jun 1, 2025 - 19:30
 0  4
ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: உக்ரைன் சதியா என விசாரணை

மாஸ்கோ: ரஷ்யாவில் மேற்கு பகுதியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ரயில் ஒன்று சிக்கி, அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

முதல்பாலம் இடிந்த சம்பவம், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பிரையான்ஸ் பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. பயணிகள் ரயில் மீது பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் ஓட்டுநரும் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. சிறிது நேரத்துக்கு பின்பு, உக்ரைன் எல்லைப்பகுதியின் குர்ஸ்க் பிராந்தியத்தில் மற்றொரு பாலம் இடிந்து வேறொரு ரயில் மீது விழுந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இடிபாடுகளில், குண்டுவெடிப்பினால் பாலம் இடிந்ததில் சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு சாலையில் விழுந்தது, இதனால் தீ விபத்தும் ஏற்பட்டது, ஆனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow