ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்பை சந்தித்த பின் அறிவிப்பு

ரஷ்​யா- உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

Aug 20, 2025 - 07:00
 0  4
ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்பை சந்தித்த பின் அறிவிப்பு

வாஷிங்​டன்: ரஷ்​யா- உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார்.

இதன் ஒரு பகு​தி​யாக கடந்த 15-ம் தேதி அதிபர் ட்ரம்​பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம் ஆங்​கரேஜ் நகரில் சந்​தித்​துப் பேசினர். இதைத் தொடர்ந்து உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வாஷிங்டனில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசி​னார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow