“ரன் குவிக்க முடியாததால் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்” - ஆஸி. முன்னாள் வீரர் மெக்ராத்
ரன் குவிக்க முடியாததால் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

பெர்த்: ரன் குவிக்க முடியாததால் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிளென் மெக்ராத் கூறியதாவது: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடர் 2 அணிகளுக்குமே சவால் நிறைந்ததாக இருக்கும். இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் ரன் குவிப்பது கடும் சவாலாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
What's Your Reaction?