ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: 4 விக்கெட் வீழ்த்தி முகமது ஷமி அசத்தல்
பெங்கால் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி முதல் இன்னிங்ஸிஸ் 19 ஓவர்களை வீசி 4 மெய்டன்களுடன், 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்கால் - மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி முதல் இன்னிங்ஸிஸ் 19 ஓவர்களை வீசி 4 மெய்டன்களுடன், 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் 90 டாட் பால்கள் வீசியிருந்தார். அத்துடன் 57 ஓவர்கள் பீல்டிங் செய்தார். 2-வது இன்னிங்ஸிலும் ஷமி 15 முதல் 19 ஓவர்கள் வரை வீசும் பட்சத்தில் சிறப்பானதாக அமையக்கூடும்.
கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது காலில் காயம் அடைந்த ஷமி அதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்த நிலையில் ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போது அவர், காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் உடற்குததியை நிரூபிக்கும் வகையில் ரஞ்சி கோப்பையில் பங்கேற்றுள்ளார். அவர், ஆட்டமிழக்கச் செய்த 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் போல்டானார்கள். ஒருவர் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார்.
What's Your Reaction?