ரஜினியின் ‘கூலி’ படத்தை மே 1-ல் ரிலீஸ் செய்ய திட்டம்

ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Nov 13, 2024 - 17:05
 0  3
ரஜினியின் ‘கூலி’ படத்தை மே 1-ல் ரிலீஸ் செய்ய திட்டம்

சென்னை: ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025-ம் ஆண்டு வெளியாகவுள்ள படங்களின் வெளியீட்டு தேதிகள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை தங்களது விநியோகஸ்தர்களுக்கு தெரிவித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow