ரஜினி மனைவியாக நடிக்க வைப்பதாக கூறி பணம் பறிக்க முயற்சி: மலையாள நடிகை வேதனை

ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த ‘ஜெயிலர்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது.

Mar 15, 2025 - 01:25
 0  3
ரஜினி மனைவியாக நடிக்க வைப்பதாக கூறி பணம் பறிக்க முயற்சி: மலையாள நடிகை வேதனை

ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த ‘ஜெயிலர்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தில், ரஜினி மனைவியாக நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி மலையாள குணசித்திர நடிகை ஷைனி சாராவிடம் மோசடி முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி நடிகை மாலா பார்வதியிடம் பேசிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் ஷைனி சாரா.

அதில், ‘ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்க நீங்கள் தேர்வாகி இருக்கிறீர்கள் என்று எனது வாட்ஸ் ஆப்பில் செய்தி ஒன்றுவந்தது. அதை நம்பினேன். பிறகு உங்களிடம் நடிகர் சங்க உறுப்பினர் கார்டு இருக்கிறதா? என்று கேட்டார்கள். இல்லை என்றேன். நாங்கள் அதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று சொன்னார் மெசேஜில் வந்தவர். பிறகு சுரேஷ்குமார் என்பவர் உங்களிடம் பேசுவார் என்றார். இரண்டு நாள் கழித்து சுரேஷ்குமார் என்பவர், சேலை அணிந்து வீடியோ காலில் வரும்படி கூறினார். சென்றேன். பார்த்துவிட்டு நீங்கள் ரஜினிகாந்த் மனைவியாக நடிக்கத் தேர்வாகி விட்டீர்கள் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow