யார் இந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்? - டெக் உலகின் ரியல் கேம்சேஞ்சர்!

தேசத்தின் இளம் வயது பில்லியனர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார் பெர்ப்ளெக்சிட்டியின் சிஇஓ அரவிந்த் ஸ்ரீநிவாஸ்.

Oct 6, 2025 - 22:30
 0  8
யார் இந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்? - டெக் உலகின் ரியல் கேம்சேஞ்சர்!

தேசத்தின் இளம் வயது பில்லியனர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார் ‘பெர்ப்ளெக்சிட்டி'யின் சிஇஓ அரவிந்த் ஸ்ரீநிவாஸ். 31 வயதான அவரது சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி. டெக் உலகின் ரியல் கேம்சேஞ்சரான அவரின் வெற்றிக் கதையை பார்ப்போம்.

சென்னையில் பிறந்தவர்: கடந்த 1994-ல் ஜூன் 7-ம் தேதி அன்று சென்னையில் பிறந்தார் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். கேட்ஜெட்கள், கோடிங் மற்றும் எலக்ட்ரானிக் பொம்மைகள் என சிறுவயது முதலே அதிக ஆர்வம் கொண்ட பிள்ளையாக வளர்த்துள்ளார். பள்ளிப் படிப்பை முடித்ததும் ‘மெட்ராஸ் ஐஐடி’-யில் மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்தார். அப்போதே தனது ஜூனியர்களுக்கு தான் கற்றதை பகிரும் பண்பு கொண்டவராக இருந்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow