‘யாத்திசை’ இயக்குநர் படத்தில் பவானி ஸ்ரீ!

‘யாத்திசை’ படம் மூலம் கவனம் பெற்ற தரணி ராஜேந்திரன் அடுத்து இயக்கும் படத்தை ஜே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.கமலக்கண்ணன் தயாரிக்கிறார்.

Jan 23, 2025 - 10:15
 0  4
‘யாத்திசை’ இயக்குநர் படத்தில் பவானி ஸ்ரீ!

‘யாத்திசை’ படம் மூலம் கவனம் பெற்ற தரணி ராஜேந்திரன் அடுத்து இயக்கும் படத்தை ஜே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.கமலக்கண்ணன் தயாரிக்கிறார். ‘யாத்திசை’யில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சேயோன் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். பவானி ஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

இந்தப் படத்துக்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. சக்தி ஃபிலிம் பேக்டரியின் பி.சக்திவேலன், ஜி.தனஞ்செயன், சித்ரா லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow