மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 22 - 28
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 22 - 28

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி, ராகு, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் எந்த முயற்சியும் வெற்றி பெறும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிந்தனை தெளிவு உண்டாகும். எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். வீடு மனை யோகம் ஏற்படும்.
What's Your Reaction?