மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.21 - 27
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக. 21 - 27

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சந்திரன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மன நிறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
What's Your Reaction?