மேஷம் ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள்!

இலக்கை எட்டிப்பிடிப்பீர்கள்: மேஷம் ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! 

Apr 11, 2025 - 16:25
 0  6
மேஷம் ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள்!

மேஷம்: பொதுவுடைமைச் சிந்தனையுள்ள நீங்கள் மற்றவர் மனம் கோணாதபடி பழகுபவர்கள். உங்கள் ராசிக்கு 7-வது இடத்தில் துலாம் ராசியில் சந்திரன் நிற்கும்போது விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் எதிலும் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதியிலேயே நின்று போன வேலைகள் எல்லாம் முடிவுக்கு வரும். மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் போட்டா போட்டி என்றிருந்த நிலைமாறும்.

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களுக்கு நல்ல அறிவுகளையும், பாரம்பரியத்தையும் சொல்லி கொடுப்பீர்கள். அவர்களின் விருப்பங்களையும் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கத்தான் செய்யும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். ஊர் பிரச்சினைகளில் தலையிட்டு முடிப்பீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow