மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மார்ச் 13 - 19
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மார்ச் 13 - 19

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியானநிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.
What's Your Reaction?