மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு

பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் இடம் பெறுவதற்காக தற்போதுள்ள வீரர்கள் தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா குற்றம்சாட்டியுள்ளார்.

Jul 18, 2025 - 02:45
 0  4
மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு

டிரினிடாட்: பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் இடம் பெறுவதற்காக தற்போதுள்ள வீரர்கள் தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 27 ரன்களில் சுருண்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow