“மொழி குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை” - கர்நாடக எதிர்ப்புக்கு கமல்ஹாசன் எதிர்வினை

‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று தான் கூறியது கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சூழலில், “அது, அன்பினால் சொல்லப்பட்டது” என்று இந்த சர்ச்சையில் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை நடிகர் கமல்ஹாசன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

May 28, 2025 - 20:55
 0  5
“மொழி குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை” - கர்நாடக எதிர்ப்புக்கு கமல்ஹாசன் எதிர்வினை

திருவனந்தபுரம்: ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று தான் கூறியது கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சூழலில், “அது, அன்பினால் சொல்லப்பட்டது” என்று இந்த சர்ச்சையில் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை நடிகர் கமல்ஹாசன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், "நான் சொன்னது அன்பினால் சொல்லப்பட்டது. நிறைய வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றை கற்பித்திருக்கிறார்கள். நான் எதையும் அர்த்தப்படுத்திச் சொல்லவில்லை. அரசியல்வாதிகள் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேசுவதற்கான நிபுணத்தும் இல்லாதவர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow