முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Nov 11, 2024 - 16:12
 0  5
முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

டர்பன்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow