‘முதலில் சினிமா ரசிகன்; பின்பு தான் நடிகன்’ - கமல் பேச்சு

முதலில் சினிமா ரசிகன், பின்பு தான் நான் நடிகன் என்று கமல்ஹாசன் பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.

Jun 1, 2025 - 13:40
 0  3
‘முதலில் சினிமா ரசிகன்; பின்பு தான் நடிகன்’ - கமல் பேச்சு

முதலில் சினிமா ரசிகன், பின்பு தான் நான் நடிகன் என்று கமல்ஹாசன் பேசும் போது குறிப்பிட்டுள்ளார். ’தக் லைஃப்’ படத்தினை விளம்பரப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் கமல். தற்போது வெளிநாடுகளில் படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “’தக் லைஃப்’ படத்தை பாருங்கள். இதில் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். முதலில் சினிமா ரசிகன், பின்பு தான் நடிகன். நான் ‘தக் லைஃப்’ பார்த்துவிட்டேன். உங்களுக்கு வைக்கப்போகும் விருந்தில் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு பார்த்துவிட்டேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow