மீனம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

மீனம் ராசிக்கு சனிப்பெயர்ச்சி எப்படி?: பலன்களும் பரிகாரமும்

Mar 27, 2025 - 20:25
 0  4
மீனம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

மீனம்: தோல்வி தீயில் சாம்பலாகாமல் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழும் வல்லமை கொண்ட நீங்கள், சுயநலமின்றி பொது நலத்துடன் வாழ்பவர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். கவலை வேண்டாம். நல்லதையே செய்வார்.

ஆட்சிப் பெற்று சுபத்தன்மை அடைவதால் சனிபகவான் பணவரவையும் அதிகரிப்பார். இனி நிம்மதி பிறக்கும். வீண் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த பணம் வந்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில், ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்மச் சனி என்பதால் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. மெடி-க்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow