மிஸ் யூ: பிடிக்காத பெண்ணை காதலிக்கும் ஹீரோ!

‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை  இயக்கிய என்.ராஜசேகர் அடுத்து இயக்கும் படம்,  ‘மிஸ் யூ’. இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார்

Nov 16, 2024 - 03:25
 0  3
மிஸ் யூ: பிடிக்காத பெண்ணை காதலிக்கும் ஹீரோ!

சென்னை: ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் அடுத்து இயக்கும் படம், ‘மிஸ் யூ’. இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். ஆஷிகா ரங்கநாத், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். வரும் 29-ம் தேதி இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

படம் பற்றி இயக்குநர் என்.ராஜசேகர் கூறும்போது, “இது காதல் கதையை கொண்ட படம். தனக்குப் பிடித்த பெண்ணையோ, ஆணையோதான் பொதுவாகக் காதலிப்பார்கள். இதில் தனக்குப் பிடிக்காத பெண்ணைக் காதலிக்கிறார் சித்தார்த். அது ஏன், எதற்கு? என்பதுதான் இதன் திரைக்கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதல் கதையில் நடித்துள்ளார் சித்தார்த். படத்தில் உதவி இயக்குநராக வருகிறார் அவர். கதை, பெங்களூரு மற்றும் சென்னையில் நடக்கிறது. இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதலை அழகான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன். தமிழ், தெலுங்கில் இந்தப் படம் வெளி யாகிறது” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow