மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர் - கோவை விவசாய கண்காட்சியில் கவனம் ஈர்ப்பு
கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், ‘அக்ரி இன்டெக்ஸ் 2025’ விவசாயக் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 14-ம் தேத வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் 600-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை: கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், ‘அக்ரி இன்டெக்ஸ் 2025’ விவசாயக் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 14-ம் தேத வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் 600-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர், நவீன ட்ரோன் கருவி, சூரிய ஒளி பம்புகள், நுண் நீர் பாசனம், சொட்டு நீர் பாசனம் தொடர்பான கருவிகள், துல்லியப் பண்ணை, பண்ணை இயந்திரமயமாக்கல், குறைந்த நீர் பயன்பாட்டு விவசாய முறைகள், மதிப்பு கூட்டுதல் மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகள், மதிப்புக்கூட்டுப் பொருட்கள், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம், வேளாண் சந்தை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?