மார்லெட் ஏவுகணைகளை வாங்க ரூ.4,155 கோடியில் ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மோடி முன்னிலையில் கையெழுத்து

இந்​தியா வந்​துள்ள இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மரும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் நேற்று சந்​தித்​துப் பேசினர்.

Oct 10, 2025 - 08:50
 0  3
மார்லெட் ஏவுகணைகளை வாங்க ரூ.4,155 கோடியில் ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மோடி முன்னிலையில் கையெழுத்து

மும்பை: இந்​தியா வந்​துள்ள இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மரும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் நேற்று சந்​தித்​துப் பேசினர். அப்​போது இங்​கிலாந்​திலிருந்து ரூ.4,155 கோடி​யில் மார்லெட் ஏவு​கணை​களை வாங்​கு​வதற்​கான ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர் 2 நாள் அரசு முறை பயண​மாக நேற்று முன்​தினம் மும்பை வந்​தார். அவருடன் 125 பேர் அடங்​கிய குழு​வும் இந்​தியா வந்​துள்​ளது. இந்​நிலை​யில், மும்​பை​யில் உள்ள மகா​ராஷ்டிர ஆளுநர் மாளி​கை​யில் இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மரும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது, ரூ.4,155 கோடி​யில் இங்​கிலாந்து ஏவு​கணை​களை வாங்​கு​வது உட்பட பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்தா​யின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow