மாமல்லபுரத்தில் ஆக.3 முதல் 12 வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு

சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்ஃபிங் கூட்​டமைப்பு சார்​பில் 4-வது ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப் நடத்​தப்பட உள்​ளது.

Jul 16, 2025 - 07:35
 0  4
மாமல்லபுரத்தில் ஆக.3 முதல் 12 வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்ஃபிங் கூட்​டமைப்பு சார்​பில் 4-வது ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப் நடத்​தப்பட உள்​ளது. இந்த போட்​டியை தமிழக அரசு மற்​றும் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு வாரி​யம் ஆகியவை இணைந்து ரூ.3.30 கோடி செல​வில் நடத்​துகிறது. இந்​தத் தொடரில் இந்​தி​யா, ஜப்​பான், கொரி​யா, குவைத், லெப​னான், சவுதி அரேபி​யா, சீன தைபே, உஸ்​பெகிஸ்​தான், ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட 20 ஆசிய நாடு​களைச் சேர்ந்த வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர்.

இவர்​கள் ஷார்ட்​போர்டு பிரிவு​களில் போட்​டி​யிடு​வார்​கள். ஓபன் பிரி​வில் ஆடவர், மகளிர், 18 வயதுக்​குட்​பட்ட சிறு​வர், மற்​றும் 18 வயதுக்​குட்​பட்ட சிறுமியர் பிரிவு​களில் போட்​டிகள் நடை​பெறும். வெற்றி பெறு​பவர்​களுக்கு தங்​கம், வெள்​ளி, வெண்​கலம் மற்​றும் தாமிரம் பதக்​கங்​கள் வழங்​கப்​படும். இந்​தத் தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜப்​பானில் நடை​பெற உள்ள ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிக்​கான இறுதி தகுதி சுற்று போட்​டி​யாக அமைந்​துள்​ளது. மேலும் ஷார்ட்​போர்டு பிரி​வில் முதலிடம் பெறும் வீரர், வீராங்​கனை 2025-ம் ஆண்டு நடை​பெற உள்ள உலக அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப் போட்​டிக்கு தகுதி பெறு​வார்​கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow