மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணி நிதானமான ஆட்டம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 63 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்திருந்தது.

Jul 24, 2025 - 01:40
 0  4
மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணி நிதானமான ஆட்டம்!

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது.

மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஷோயிப் பஷிருக்கு பதிலாக லியாம் டாவ்சன் இடம் பெற்றார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கருண் நாயர் நீக்கப்பட்டு சாய் சுதர்சன் களமிறக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow