மலையாள இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாயர் கவலைக்கிடம்!

மலையாள சினிமா இயக்குநரும், எழுத்தாளருமான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Dec 20, 2024 - 17:30
 0  4
மலையாள இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாயர் கவலைக்கிடம்!

கோழிக்கோடு: மலையாள சினிமா இயக்குநரும், எழுத்தாளருமான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

91 வயதான எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது பல்வேறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்மையில் ‘மனோரதங்கள்’ என்ற பெயரில் ஆந்தாலஜியாக வெளியானது. மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது பெற்றவர். இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது கடந்த 1996-ம் ஆண்டு அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow