“மன வேதனை...” - ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சி நெரிசலில் பெண் பலியானது குறித்து படக்குழு உருக்கம்

 ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில்,  “மன வேதனை அடைந்தோம். ஆதரவு நல்குவோம்” என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Dec 5, 2024 - 19:20
 0  3
“மன வேதனை...” - ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சி நெரிசலில் பெண் பலியானது குறித்து படக்குழு உருக்கம்

ஹைதாராபாத்: ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில், “மன வேதனை அடைந்தோம். ஆதரவு நல்குவோம்” என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ‘புஷ்பா 2’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு: “நேற்று (டிச.4) இரவு சிறப்பு திரையிடலின்போது நடைபெற்ற சோகமான சம்பவத்தால் நாங்கள் மிகுந்த மன வேதனை அடைந்தோம். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு துணையாக நிற்பதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆழ்ந்த வருத்தங்களுடன் மைத்ரி மூவி மேக்கர்ஸ்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow