மதுரை - விளாச்சேரியில் இருந்து கேரளா செல்லும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகளை முழுவீச்சில் தயார் செய்து மதுரை விளாச்சேரியிலிருந்து கேரளாவுக்கு மண்பாண்டத் தொழிலாளர்கள் அனுப்பி வருகின்றனர்.

Dec 16, 2024 - 19:45
 0  15
மதுரை - விளாச்சேரியில் இருந்து கேரளா செல்லும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்!

மதுரை: கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகளை முழுவீச்சில் தயார் செய்து மதுரை விளாச்சேரியிலிருந்து கேரளாவுக்கு மண்பாண்டத் தொழிலாளர்கள் அனுப்பி வருகின்றனர்.

மதுரை அருகே விளாச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட மண்பாண்டக் கைவினைஞர்கள் குடும்பத்தினர் உள்ளனர். இங்கு களிமண் மண்பாண்டப்பொருட்கள், கலைநயமிக்க பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். பருவ காலத்துக்கு ஏற்றவாறு மண்பாண்டப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி கொலு பொம்மைகள், பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் என ஆண்டுதோறும் களிமண்ணால் ஆன பொருட்களை செய்து வருகின்றனர். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் தயாரித்து அதிக அளவில் கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow