மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோயில்களில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும் கருப்பணசுவாமிக்கு அரிவாள் நேர்த்திகடனும் அவர் செலுத்தினார்.  

Dec 8, 2024 - 19:40
 0  15
மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மதுரை: மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோயில்களில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும் கருப்பணசுவாமிக்கு அரிவாள் நேர்த்திகடனும் அவர் செலுத்தினார்.

பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தாலும், சமீபத்தில் வெளியான ‘அமரன்’ பட மூலம் புகழ் பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரை கள்ளழகர் கோயிலுக்கு இன்று (டிச.08) வந்தார். மலை மீதுள்ள ஆறாவது படை வீடு, பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலிலும் தரிசனம் செய்தார். காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி சென்று அங்கும் சுவாமி தரிசனம் செய்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow