“மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது பெருமை” - ‘தக் லைஃப்’ குறித்து, ‘மிர்சாபூர்’ நடிகர் நெகிழ்ச்சி

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில்  ‘மிர்சாபூர்’ இணை தொடர் மூலம் கவனம் பெற்ற நடிகர் அலி ஃபசல் நடிக்கிறார். அவர் தனது படப்பிடிப்பு முடித்துள்ளார். 

Nov 28, 2024 - 14:40
 0  3
“மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது பெருமை” - ‘தக் லைஃப்’ குறித்து, ‘மிர்சாபூர்’ நடிகர் நெகிழ்ச்சி

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் ‘மிர்சாபூர்’ இணை தொடர் மூலம் கவனம் பெற்ற நடிகர் அலி ஃபசல் நடிக்கிறார். அவர் தனது படப்பிடிப்பைமுடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் நிறுனவத்துக்கு அளித்த பேட்டியில், “மணிரத்னத்தின் இயக்கத்தில் பணியாற்றுவது பெருமையான விஷயம். கமல்ஹாசன் மற்றும் பிற நடிகர்களுடன் இணைந்து நடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். ஒரு நடிகராக கடந்த 2 மாதங்களில் நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். தமிழ் கற்றுக்கொண்டு புதிய திரையுலக கலாச்சாரத்துக்குள் என்னை உட்படுத்திக்கொண்டு, என்னுடைய எல்லைகளை விரிவடையச் செய்வது மகிழ்ச்சி.” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow