மகளிர் யு19 டி20 உலகக் கோப்பை இறுதிக்கு முன்னேறியது இந்தியா!
நடப்பு மகளிர் யு19 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

சென்னை: நடப்பு மகளிர் யு19 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.
114 ரன்களை விரட்டிய இந்திய அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. இந்திய அணியின் ஓபனர் ஜி.கமலினி 50 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இன்னிங்ஸை ஓபன் செய்த திரிஷா கோங்கடி 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
What's Your Reaction?