மகரம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025
மகரம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

மகரம்: எங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்க நினைக்கும் நீங்கள் சிரமங்களையும் சிரித்த முகத்தோடு எதிர்கொண்டு வெற்றி காண்பவர்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 6-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். அலைச்சலும் வேலைச்சுமையும் உண்டு என்றாலும், குருவின் திருவருள் பார்வை உங்களுக்குப் பலவிதத்திலும் ஆதாயத்தை அளிப்பதாக அமையும். நண்பர்கள் சிலர் உங்களை விட்டு ஒதுங்கிப் போவார்கள். வீண் வதந்திகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சின்னச் சின்ன பகையும், மோதலும் ஏற்படும். கவனம் தேவை. சகோதர, சகோதரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். வயல், வாய்க்கால் விஷயமாக ஏதேனும் மனஸ்தாபம் இருந்தால் பேசி, தீர்த்துக் கொள்ளவும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்து கட்டுவீர்கள். ஊர் மக்களிடமும் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பழைய வழக்குகள் ஏதேனும் இருந்தால், அவை தொடர்பாக கவனம் செலுத்துவது அவசியம். வழக்கறிஞரை ஆலோசித்துச் செயல்படுங்கள். தானாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பேச்சிலும், செயலிலும் நிதானம் அவசியம். இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும். சிறு சிறு வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோல் வாகனம் பழுதுபட்டு, பயணம் தடைபடவும் வாய்ப்பு உண்டு.
What's Your Reaction?