‘புஷ்பா 2’ பின்னணி இசையில் நான் ஒரு பகுதி மட்டுமே: தமன் விளக்கம்
“‘புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசையில் நான் ஒரு பகுதி மட்டுமே. அதில் பல இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்” என்று தமன் தெரிவித்துள்ளார்.

சென்னை: “‘புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசையில் நான் ஒரு பகுதி மட்டுமே. அதில் பல இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்” என்று தமன் தெரிவித்துள்ளார்.
‘புஷ்பா 2’ படத்துக்கு பின்னணி இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியானது. இதனை தமனும் உறுதிப்படுத்தினார். இதனிடையே ‘தாகு மஹாராஜ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தமன் பேசும் போது, “புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசையில் நான் ஒரு பகுதி மட்டுமே. அதில் பல இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவ்வளவு பெரிய படத்தின் பின்னணி இசையின் முழு பொறுப்பையும் என்னால் ஏற்க முடியவில்லை.
What's Your Reaction?