‘பும்ராவை எதிர்கொள்ள திட்டம் தயார்’ - சொல்கிறார் ஆஸி. இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ்

மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் பும்ராவை எதிர்கொள்ள திட்டம் தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.

Dec 24, 2024 - 08:35
 0  3
‘பும்ராவை எதிர்கொள்ள திட்டம் தயார்’ - சொல்கிறார் ஆஸி. இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ்

மெல்பர்ன்: மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் பும்ராவை எதிர்கொள்ள திட்டம் தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 26-ம் தேதி மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ள இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow