புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க திட்டம் நிலை என்ன? - அப்டேட் விவரம்

புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்குவதற்கான திட்ட வரை படத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையம் அனுமதித்துள்ளதாக இயக்குநர் ராஜசேகர ரெட்டி கூறினார். தோராய விலை நிர்ணயத்தை தமிழக அரசு புதுச்சேரிக்கு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

Nov 21, 2024 - 22:25
 0  5
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க திட்டம் நிலை என்ன? - அப்டேட் விவரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்குவதற்கான திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையம் அனுமதித்துள்ளதாக இயக்குநர் ராஜசேகர ரெட்டி கூறினார். தோராய விலை நிர்ணயத்தை தமிழக அரசு புதுச்சேரிக்கு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலைய வளாகத்தில் அதன் விரிவாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் மற்றும் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், நியமன உறுப்பினர்கள் 3 பேர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்துக்கு புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி தலைமை வகித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow