புதிய நடைமுறை: கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல்!

கால தவணைக்குள் கடனை திரும்ப செலுத்தினால் மாநில அரசே அந்த அசலுக்குரிய வட்டியை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்குகிறது

Sep 19, 2025 - 16:20
 0  6
புதிய நடைமுறை: கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல்!

ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில் பயிர்க்கடன் பெறுவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 144 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க ஆடு வளர்ப்பு, கறவை மாடு, கரி மூட்டத் தொழில், மகளிர் சுய உதவிக்குழு, பயிர்க் கடன் போன்ற பல்வேறு கடன்கள் வட்டியில்லாமல் ஓராண்டுக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட கால தவணைக்குள் கடனை திரும்ப செலுத்தினால் மாநில அரசே அந்த அசலுக்குரிய வட்டியை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்குகிறது. ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு புரட்டாசி ராபி பருவத்தில் சுமார் ரூ.160 லட்சம் வரை பிணையமின்றியும், அடமானமின்றியும் ஓராண்டுக்கு வட்டியில்லாமல் வழங்குகிறது. இந்த பயிர் கடனை கிராமப் புறங்களில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் வெளி நபர்களிடமும், தனியாரிடமும், தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிடமும் விவசாயத்துக்காக பெறக்கூடிய கடன் முற்றிலும் குறைந்து வந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow