புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணிகள் வெற்றி

ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது.

Aug 21, 2025 - 08:15
 0  4
புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணிகள் வெற்றி

சென்னை: ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - இமாச்சல பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 274 ரன்களும், இமாச்சல பிரதேசம் 214 ரன்களும் எடுத்தன.

60 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 45 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. விமல் குமார் 105. ராதாகிருஷ்ணன் 59 ரன்கள் சேர்த்தனர். 307 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இமாச்சல் பிரதேசம் 26.1 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow