புகழ்பெற்ற தபேலா ‘மேஸ்ட்ரோ’ ஜாகிர் ஹுசைன் காலமானார்! - பிரபலங்கள் இரங்கல்
இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.

மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.
இதயம் தொடர்பான பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜாகிர் ஜாகிர் ஹுசைன் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு ஐசியு-வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனை அவரது நெருங்கி நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சவுராசியா உறுதி செய்துள்ளார்.
What's Your Reaction?