பீடா பிரியர்களுக்காக வட மாநிலங்களுக்கு செல்லும் சின்னமனூர் வெற்றிலை!
தேனி மாவட்டம் ஜெயமங்கலம், சின்னமனூர், வடுகபட்டி, சில்வார்பட்டி, மார்க்கையன்கோட்டை, வேம்பரளி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

சின்னமனூர்: தேனி மாவட்டம் ஜெயமங்கலம், சின்னமனூர், வடுகபட்டி, சில்வார்பட்டி, மார்க்கையன்கோட்டை, வேம்பரளி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. சக்கை, சைடுமார், இளங்கால், சைடு பறி, முதியால் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்த வெற்றிலை வகைகள் சின்னமனூர், பெரியகுளம், தேனி சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
அங்கு ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு அடுக்கப்படுகின்றன. இவற்றை வியாபாரிகள் கொள்முதல் செய்து பாண்டிச்சேரி, மதுரை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கொல்கத்தா, பெங்களூரூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரும்புச் சத்து உள்ள இந்த வெற்றிலை செரிமானத்துக்கு உதவும் மருத்துவக் குணம் கொண்டது.
What's Your Reaction?