‘பிளைண்ட்’ படம் மூலம் இயக்குநராகும் ஆர்.கே.சுரேஷ்

பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதில் அவர் கொடூர வில்லனாக நடித்திருந்தார்

Oct 20, 2025 - 12:20
 0  3
‘பிளைண்ட்’ படம் மூலம் இயக்குநராகும் ஆர்.கே.சுரேஷ்

பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதில் அவர் கொடூர வில்லனாக நடித்திருந்தார். அடுத்து விஷாலின் ‘மருது’, ‘பில்லா பாண்டி’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘தலைவன் தலைவி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களையும் தயாரித்து வரும் அவர், இப்போது இயக்குநராக அறிமுகமாகிறார்.

அவர் இயக்கும் படத்துக்கு ‘பிளைண்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்டூடியோ 9 புரொடக் ஷன்ஸ் மூலம் மாதவி சுரேஷ் தயாரிக்கிறார். விஜய் கிரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு வில்லியம் பிரான்சிஸ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் படம் வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow