‘பிளாக்மெயில்’ படத்தில் எதிர்பாராத திருப்பங்கள்

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கண்ணை நம்பாதே' படங்களை இயக்கிய மு.மாறன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘பிளாக்மெயில்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார்.

Dec 2, 2024 - 03:50
 0  3
‘பிளாக்மெயில்’ படத்தில் எதிர்பாராத திருப்பங்கள்

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கண்ணை நம்பாதே' படங்களை இயக்கிய மு.மாறன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘பிளாக்மெயில்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். கதாநாயகியாக தேஜு அஸ்வினியும், ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரிபிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைக்கிறார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் மு. மாறன் கூறும்போது, ​​“எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம்- டிராமா கதைதான் இது. படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளன. நடிகர், இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் பிஸியாக இருந்தாலும் இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். அவர் தனது டப்பிங்கை தொடங்கி இருக்கிறார். விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும்" என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow