பிரியங்கா சோப்ரா ஒரு ரோல் மாடல்: புகழ்கிறார் சமந்தா

நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவணுடன் நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர் பிரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது.

Nov 11, 2024 - 16:14
 0  4
பிரியங்கா சோப்ரா ஒரு ரோல் மாடல்: புகழ்கிறார் சமந்தா

நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவணுடன் நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர் பிரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது. இதில் ஹீரோவுக்கு இணையாக சமந்தாவும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிகவும் பொறுப்புடன் தான் தேர்வு செய்கிறேன். இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று உணர்கிறேன். திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களை ஆண்கள்தான் முடிவு செய்கிறார்கள். அதனால் அது நிச்சயம் பெண்களின் பயணமாக இருக்காது. இது அவர்களின் பலமாகவோ பலவீனமாகவோ இருக்காது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow