பாலு மகேந்திராவின் ‘வீடு’ போல 3 பிஹெச்கே படம் அமையும்: ரவி மோகன் கணிப்பு
ஸ்ரீ கணேஷ் இயக்கும் படம், ‘3 பிஹெச்கே’. சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் இதில், சரத்குமார், தேவயானி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீ கணேஷ் இயக்கும் படம், ‘3 பிஹெச்கே’. சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் இதில், சரத்குமார், தேவயானி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ள இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ரவி மோகன் பேசும்போது, “இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். பாலு மகேந்திராவின் ‘வீடு’ எந்தளவுக்குப் பேசு பொருளாக அமைந்ததோ, அதுபோல இந்தப் படமும் அமையும். நானும் சித்தார்த்தும் ஒன்றாக வளர்ந்தோம். சித்தார்த், எப்போதும் தப்பான படங்கள் செய்ததில்லை. இனியும் அப்படித்தான் இருப்பார்.
What's Your Reaction?