பார்வதி முதல் நஸ்ரியா வரை: தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு

‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான அவரது பதிவுக்கு பல்வேறு நடிகைகள் லைக் செய்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Nov 16, 2024 - 15:05
 0  4
பார்வதி முதல் நஸ்ரியா வரை: தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு

சென்னை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான அவரது பதிவுக்கு பல்வேறு நடிகைகள் லைக் செய்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். குறிப்பாக தனுஷுடன் நடித்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தனுஷுக்கு எதிராக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா, கவுரி கிஷன், காயத்ரி ஷங்கர், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் லைக் செய்துள்ளனர். இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow