பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்: அதிபர் ட்ரம்ப் உத்தரவின்படி நடவடிக்கை

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவிகளை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்

Jan 30, 2025 - 02:40
 0  4
பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்: அதிபர் ட்ரம்ப் உத்தரவின்படி நடவடிக்கை

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவிகளை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் சர்வதேச மேம்பாட்டு திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், தொல்லியல் ஆய்வு இடங்கள், அருங்காட்சியங்கள், உள்ளூர் மொழிகள் மற்றும் கைவினைத் தொழில்களை காக்க, கலாச்சார பாதுகாப்பு நிதியை பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் நிதி மூலம் வழங்கி வந்தது. இந்த நிதியை தற்காலிகமாக நிறுத்தவும், திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை மறு ஆய்வு செய்யவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow