“பழிவாங்குவது உறுதி, இந்தப் போர்...” - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது என்ன?

பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்பிற்காக, நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

May 8, 2025 - 09:10
 0  2
“பழிவாங்குவது உறுதி, இந்தப் போர்...” - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது என்ன?

இஸ்லாமாபாத்: “பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர் கூறியது: “இந்தியா நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவிகளின் ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். பாகிஸ்தான் தனது தற்காப்புக்காக ஒரு பயங்கரமான பதிலடியை வழங்க முடியும் என்பதைக் காட்டினோம். எல்லைப் பகுதியில், சுமார் ஒரு மணி நேரம் சண்டை நடந்தது. பாகிஸ்தான் விமானிகள் வான்வெளியில் இருந்து தாக்கினர், எதிரியின் விமானங்கள் துண்டு துண்டாகச் சிதறின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow