பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி மறைவு - கதாநாயகியாக பல ஆண்டுகள் முத்திரைப் பதித்தவர்!
பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.

சென்னை: பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?