பத்திரப் பதிவுக்கு ஜூலை 7-ல் தேதி கூடுதல் டோக்கன்கள் வழங்கல்!

ஜூலை 7ம் தேதி கூடுதல் டோக்கன்கள்: பதிவுத் துறை தலைவர் தகவல்

Jul 4, 2025 - 19:50
 0  4
பத்திரப் பதிவுக்கு ஜூலை 7-ல் தேதி கூடுதல் டோக்கன்கள் வழங்கல்!

சென்னை: ஜூலை 7-ம் தேதி சுப முகூர்த்த தினம் என்பதால், அன்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் சுப முகூர்த்த தினமான ஜூலை 7-ம் தேதி அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow