பட்ஜெட் 2025: மாநிலங்களின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வட்டியில்லாமல் ரூ.1.5 லட்சம் கோடி கடன்

உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.5 லட்சம் கோடி வழங்கப்படும்

Feb 2, 2025 - 10:45
 0  6
பட்ஜெட் 2025: மாநிலங்களின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வட்டியில்லாமல் ரூ.1.5 லட்சம் கோடி கடன்

உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.5 லட்சம் கோடி வழங்கப்படும். கடந்த 2021-ம் ஆண்டுஅறிவிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அரசு சொத்துகளை பணமாக்கும் திட்டம் வெற்றி பெற்றது.

இதையடுத்து, 2-ம் கட்டமாக 2025-30 காலகட்டத்தில் ரூ.10 லட்சம் கோடி திரட்டுவதற்கான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த திட்டத்துக்கு ஆதரவாக ஒழுங்குமுறை மற்றும் நிதி நடவடிக்கைகள் நன்றாக வடிவமைக்கப்படும்.ஒவ்வொரு அமைச்சகமும் உள்கட்டமைப்பு தொடர்பான 3 ஆண்டு திட்டங்களைக் கொண்டு வரும். அவை அரசு, தனியார் கூட்டு (பிபிபி) முறையில் செயல்படுத்தப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow