நெட்ஃபிளிக்ஸ், நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு எதிராக வழக்குத் தொடர தனுஷின் உண்டர்பார் நிறுவனத்துக்கு ஐகோர்ட் அனுமதி

‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நடிகர் தனுஷின் உண்டர் பார் நிறுவனம் வழக்குத் தொடர அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nov 27, 2024 - 18:15
 0  6
நெட்ஃபிளிக்ஸ், நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு எதிராக வழக்குத் தொடர தனுஷின் உண்டர்பார் நிறுவனத்துக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நடிகர் தனுஷின் உண்டர் பார் நிறுவனம் வழக்குத் தொடர அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்திய காரணத்துக்காக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். இந்த நோட்டீசுக்கு நயன்தாரா, சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம். ‘நானும் ரௌடிதான்’ படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காப்புரிமை காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன, என்று பதிலளித்திருந்தார் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow