நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
நிதி நெருக்கடி காரணமாக திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

புதுடெல்லி: நிதி நெருக்கடி காரணமாக திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
நிதி நெருக்கடியால் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை நிறுத்தியது. திவால் நடவடிக்கையை தொடர்ந்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க அனுமதி வழங்கியது.
What's Your Reaction?