நாடு முழுவதும் பல இடங்களில் யுபிஐ சேவை பாதிப்பு: 30 நாட்களில் 3-வது முறை செயலிழப்பு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை பாதிக்கப்பட்டன.

Apr 12, 2025 - 15:50
 0  4
நாடு முழுவதும் பல இடங்களில் யுபிஐ சேவை பாதிப்பு: 30 நாட்களில் 3-வது முறை செயலிழப்பு

புதுடெல்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை பாதிக்கப்பட்டன.

கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற முன்னணி கட்டண செயலிகள் மூலம் கட்டணங்கள் செலுத்த முடியாதததால், வாடிக்கையாளர்களும், வியாபாரகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுபோன்ற குறைபாடுகளை கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் என்ற வலைதளத்தின்படி, பகல் 12.56 மணி வரை 2,147 புகார்கள் பதிவாகியுள்ளன. 80 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களின் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் இருந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow