நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் சிறை - ‘புஷ்பா 2’ நெரிசலில் பெண் உயிரிழந்த வழக்கில் நீதிமன்ற காவல்

‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியின்போது படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dec 13, 2024 - 18:05
 0  4
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் சிறை - ‘புஷ்பா 2’ நெரிசலில் பெண் உயிரிழந்த வழக்கில் நீதிமன்ற காவல்

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியின்போது படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி (39) என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்தார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow